2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

முல்லை, கிளி.இல் இருந்து 5,442 வெடிப்பொருட்கள் அகற்றல்

Editorial   / 2018 ஜூலை 19 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரசசார்பற்ற நிறுவனமானது, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில், கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் இவ்வருடம் ஜூன் மாதம் வரையான காலப் பகுதியில், 5,442 அபாயகரமான வெடிப்பொருட்களை அகற்றியுள்ளதாக, அந்நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

இதற்கமைய, முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலுமே, இந்த வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குறித்தப் பகுதிகளில் உள்ள 532,391 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்தே, இந்த வெடிபொருட்கள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளனவென, அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .