Princiya Dixci / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
ஊர்காவற்றுறை பகுதியில் இயங்கி வந்த மதுபான சாலையொன்று மூடப்படட நிலையில், அதனை மீளதிறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (08) போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, தீவக சிவில்சமூக அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,ஊர்காவற்றுறை பிரதான சாலையில் இயங்கி வந்த மதுபானசாலை, தீவக சிவில் சமூக அமைப்பு, பாடசாலை சமூகம், ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை நிர்வாகம்உள்ளிட்டஅமைப்புகள் மற்றும் பிரதேச மக்களின் எதிர்ப்பையடு்த்து,2016ஆம் ஆண்டு மூடப்பட்டதாகத்தெரிவித்தார்.
இந்நிலையில்,தற்போது ஊர்காவற்றுறை பிரதேச செயலாளரால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலில், கடந்த காலத்தில் ஊர்காவற்றுறை - சுங்க வீதியில் இயங்கிய மதுபானசாலை மீளசெயற்படுத்துவதற்காக ஊர்காவற்றுறை - சுருவில் வீதியில் உள்ள காணியை தெரிவு செய்துள்ளனர் எனவும்எனவே, அதற்கான அனுமதியை வழங்குவது தொடர்பாக பிரதேச மக்களின் கருத்துகளை 29.03.2021ஆம்திகதியிலிருந்து 14 நாள்களுக்குள் கிராம உத்தியோகத்தர் ஊடாக எமக்குத் அறியத் தருமாறுகேட்டுக்கொள்கிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும், அவர் கூறினர்.
இந்த அறிவித்தலில், குறித்த மதுபானசாலை முன்னர் எதற்காக மூடப்பட்டது என்பது தொடர்பான எந்தவிவரங்களும் தெரியப்படுத்தப்படாது இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இயங்கிக்கொண்டுஇருக்கும் மதுபான சாலையை பிறிதோர் இடத்துக்கு மாற்றம் செய்வது போன்ற மாயையை ஏற்படுத்தி மீளதிறக்க அனுமதி கோருகின்றனரெனவும் சாடினார்.
எனவே, மதுபானசாலை திறப்பை எதிர்த்து நாளை (08) காலை 10 மணியளவில், ஊர்காவற்றுறை பிரதேசசெயலகம் முன்றலில், எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கப்படவுள்ளதாக, அவர் கூறினார்.
6 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago