2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மூன்றாவது நாளாகவும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி. நிதர்ஷ்ன்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி, நாடளாவிய ரீதியில் வாகன வழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை, யாழ்ப்பாணத்தில் மூன்றாவது நாளாகவும் வடமராட்சியில் இன்று (12) இடம்பெற்றது.

வல்லை முனியப்பர் கோவில் முன்பாக தேங்காய் உடைத்து வாகன வழிப் கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் முன்னெடுத்த கையெழுத்து திரட்டும் பிரசார நடவடிக்கையின் மூன்றாவது நாள் வடமராட்சி பகுதிகளில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X