2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Princiya Dixci   / 2022 மே 03 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநகர் பகுதியில் அடையாளம் காணப்படாத மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் வைத்து தீயில்  எரிந்து நாசமாகியுள்ளது.

வீதியில் மோட்டார் சைக்கின் ஒன்று  எரிந்து கிடப்பதாக பிரதேச மக்களால் மல்லாவி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட பின்னரே பொலிஸார் அவ்விடத்துக்கு  வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

NP BGP 4799 என்ற இலக்கத் தகட்டை கொண்ட மோட்டார் சைக்கிளே, நேற்று (02) இரவு இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யாத  நிலையில்,  மல்லாவி  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X