Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஜூன் 29 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞன் ஒருவன் பலியாகியுள்ளான். மற்றுமோர் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
அராலி வீதி, கலுண்டை சந்தி, மானிப்பாய் பொலிஸ் களத்தில் அராபியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அப்பாச்சி மோட்டார் சைக்கிளும்,
யாழ்ப்பாணத்திலிருந்து அராலி நோக்கிப் பயணித்த பிளேஸர் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
அராலி மத்தி வட்டுக்கோட்டை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (வயது 29) என்பவரும், மற்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த வட்டுக்கோட்டை சங்கரத்தையைச் சேர்ந்த மகேஸ்வரன் மயுரன் (வயது 37) என்பவரும் விபத்துக்குள்ளாகி காயமடைந்தனர்.
படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரன் மயுரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .