2025 ஜூலை 21, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தில் தேங்காய் தட்டுப்பாடு

Niroshini   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணத்தில் தேங்காய்க்கு  தட்டுப்பாடு நிலவி வருகின்றமையால் தேங்காயானது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

தேங்காய்கள் அவற்றின் அளவுக்கேற்ப 40 ரூபாய் முதல்; 60 ரூபாய் வரையில் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்படுகின்றது.

தேங்காய் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து கிளிநொச்சியின் பளை, தென்மராட்சிப் பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தேங்காய் எடுத்து வந்து விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும்,தேங்காய் தட்டுப்பாட்டின் காரணமாக முட்டுக்காய் தேங்காய்களையும் விற்பனை செய்யும் நடவடிக்கையில் பலர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X