2025 ஜூலை 21, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தில் புதிய ஹோட்டல்களுக்கு அனுமதி இரத்து

Menaka Mookandi   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் புதிய ஹோட்டல்கள் தொடங்குவதற்கு 2019ஆம் ஆண்டு வரை அனுமதி வழங்கப்படாது என மாவட்டச் செயலகம் மற்றும் சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நீர்ப் பிரச்சினை இருப்பதன் காரணமாகவே புதிய ஹோட்டல்கள் தொடங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் இரணைமடுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டுவரப்பட்ட பின்னரே ஹோட்டல்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக வடமாகாண சுற்றலாத்துறை ஒன்றியத்தின் தலைவர் தவராஜா திலகராஜ் தெரிவித்தார்.

'இதனைவிட, யாழ்ப்பாணத்தின் வடிகாலமைப்பானது சீரான முறையில் செயற்படவில்லை என்பதாலும், புதிய ஹோட்டல்களுக்கான அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது' என அவர் கூறினார்.

'நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால், கல்லுண்டாய் வெளியில் மேற்கொள்ளப்படும் கழிவகற்றல் திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே ஹோட்டல்களுக்கான அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வரை, அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையில் பங்களிப்பு செலுத்த விரும்பும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு மாத்திரமே இந்த அனுமதி மறுக்கப்படுகின்றது. தென்னிலங்கையிலிருந்து வருபவர்களுக்கு எவ்வித தடையுமின்றி அனுமதி வழங்கப்படுகின்றது' என வடமாகாண சுற்றலாத்துறை ஒன்றியத்தின் தலைவர் தவராஜா திலகராஜ் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .