2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழில் இயங்கும் ஊடக நிறுவனத்துக்கு சீல் வைப்பு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் இயங்கும் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமொன்றுக்கு நீதிமன்ற அனுமதியுடன் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள், நேற்று செவ்வாய்க்கிழமை (20) மாலை சீல் வைத்தனர்.

குறித்த நிறுவனம், சட்டவிரோதமான முறையில் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையம் என்பவற்றை இயக்கியதைக் கண்டறிந்த ஆணைக்குழு, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய சீல் வைக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்திலிருந்த ஒளி மற்றும் ஒலிபரப்புக்கு பயன்படுத்தப்படும் சாதனங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டதுடன், அந்நிறுவனத்துக்குப் பொறுப்பாக இருந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் ஆணைக்குழுவின் அதிகாரிகள், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X