Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
குணசேகரன் சுரேன்
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிகரித்த வெப்பநிலை காரணமாக உள்ளூர் மரக்கறிகளின் உற்பத்தி குறைவடைந்து வருவதால், யாழ்ப்பாணத்துச் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்து காணப்படுகின்றன என்று, சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் மிகவும் மலிந்த நிலையில் காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள், இந்த வாரத்தில் மூன்று, நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளன.
முன்னர் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் தக்காளி தற்போது 160 ரூபாய் ஆகவும் 30 ரூபாயக்;கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கத்தரி தற்போது 140 ரூபாய் ஆகவும் காணப்படுகிறது.
60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் போஞ்சி தற்போது 200 ரூபாயாகவும் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கரட் 120 ரூபாய் ஆகவும் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பீற்றூட் தற்போது 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மற்றைய மரக்கறிகளின் விலையும் அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு கிலோகிராம் பயற்றங்காய் 200 ரூபாயாகவும் ஒரு கிலோ கிராம் கறி மிளகாய் 140 ரூபாயாகவும், ஒரு கிலோ கிராம் லீக்ஸ் 200 ரூபாயாகவும் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 160 ரூபாயாகவும், வெங்காயம் ஒரு கிலோ கிராம் 120 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ கிராம் முருங்கைக்காய் 650 ரூபாய் ஆகவும், கோவா 100 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago