Janu / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து , விளக்கமறியல் கைதிகள் இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை அவரது தாயார் பார்வையிட சென்ற சமயம் அவருக்கு பீடி வழங்கியுள்ளார்.
அதனை சிறைக்கூடத்திற்குள் வைத்திருந்தவேளை , சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் கண்டறிந்து , அவற்றை பறிக்க முயன்றபோது முரண்பாடு ஏற்பட்டு , குறித்த கைதியை தாக்கியுள்ளனர். அதேவேளை , பீடி வைத்திருந்த தகவலை தமக்கு வழங்கவில்லை என அந்த சிறைக்கூடத்தில் இருந்த மற்றையவரையும் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் , தாக்குதலுக்கு இலக்கான இருவரையும் வழக்கு தவணைக்காக யாழ்.நீதவான் நீதிமன்றுக்கு அழைத்து சென்ற போது , இருவரும் தம் மீதான தாக்குதல் தொடர்பில் மன்றில் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து , அவர்களை சிகிச்சைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதித்து , சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தி மருத்துவ சான்றிதழ் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் .
எம்.றொசாந்த்
4 minute ago
23 minute ago
34 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
23 minute ago
34 minute ago
40 minute ago