2025 மே 05, திங்கட்கிழமை

யாழில் 4 வயதுக் குழந்தைக்கு நடந்த கொடுமை

Freelancer   / 2022 நவம்பர் 10 , பி.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்ட நான்கு வயதுக் குழந்தை யாழ்ப்பாண பண்ணை பாலத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியில் வசித்து வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்து ஒரு வருடத்திற்குப் பின் அந்தப் பெண்ணை விட்டுச் சென்றுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இருவருக்கும் இடையே தொடர்புகள் எவையும் இருந்ததில்லை. அவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சேர்ந்து வாழ்வோம் எனக்கூறிக் கொண்டு வந்த நபர், மனைவியையும், மகளையும் அழைத்துச் சென்று 5 நாட்களாக அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இதன்போது, குறித்த சந்தேகநபர் கடந்த 04.11.2022 அன்று, வழக்கு விசாரணை ஒன்றிற்காக ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

மேலும், வாய் பேச முடியாதவர்களது சமூக ஊடக குழுமம் (வாட் எப்) ஒன்றில் தனது மகளை தாக்கும் காணொளியை வெளியிட்டு, தனது மனைவியும், குறித்த குழந்தையின் தாயுமான பெண்ணின் மரண அறிவித்தல் போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

இந்தக் காணொளியும், மரண அறிவித்தல் போஸ்டரும் சமூக ஊடகங்களில் பரவி   ஊர்காவற்துறை பொது சுகாதார வைத்திய அதிகாரியின் கண்களில் பட்டது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, குறித்த காணொளியையும், மரண அறிவித்தல் போஸ்டரையும் ஊர்காவற்துறை நீதிவானுக்கும் ஊர்காவற்துறை பொலிஸாருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு, ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்ட நிலையில் காணொளியில் இருந்த குறித்த குழந்தை இன்று காலை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு யாழ். மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X