Freelancer / 2022 நவம்பர் 05 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
அச்சுவேலி, பத்தமேனி பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் சிந்துஜன் என்பவர் மீதே வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் , விடுதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை இன்றைய தினம் அதிகாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய வன்முறை கும்பலே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (R)
40 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
7 hours ago
09 May 2026