Freelancer / 2023 ஓகஸ்ட் 12 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் 54 வயதான குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி நேற்றைய தினம் திருமணச் சடங்கிற்கு சென்றவேளை குடும்பஸ்தர் தனிமையாக வீட்டில் இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை உறவினரொருவர் இவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த உறவினர் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்தவரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் இதனால் குறித்த குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் 54வயதான கணபதிப்பிள்ளை மகேந்திரன் என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி மயூரன் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago