Freelancer / 2022 மே 21 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் அறைந்ததால் தரம் - 10இல் கல்வி கற்கும் மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரே மாணவரை தாக்கியுள்ளார்.
மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பொலிஸ் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையும் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. (R)
32 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago