Freelancer / 2023 பெப்ரவரி 13 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - அத்தியடி பகுதியில் பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்தியடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கலாநிதி (வயது 52) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கொலையானவரின் மகள் தெரிவிக்கையில்,
தமது வீட்டுக்கு , வீட்டு வேலைகளை செய்வதற்கும் , ஆடுகளுக்கு குழைகள் வெட்டவும் என ஒருவர் வருகின்றவர் எனவும் , அவர் நேற்றைய தினமும் வந்திருந்த போது , நான் வீட்டுக்குள் இருந்தேன். அம்மா தான் அவருடன் கதைத்துக்கொண்டு இருந்தார்.
பிறகு இருவரும் வாக்கு வாதப்படுவது கேட்டது, சிறிது நேரத்திற்குள் அம்மா பெரிய சத்தமாக கத்தினார். சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த போது , அம்மா இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அந்நபரை அவ்விடத்தில் காணவில்லை என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது , கொலையானவரின் மகள் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மரக்கட்டை ஒன்றினால் தாக்கியே பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாவும் , சந்தேகநபர் தொடர்பிலான தகவல் கிடைக்கப்பெற்று உள்ளன. அவற்றின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம் என யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். R
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026