Editorial / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ். சிறைச்சாலை அத்தியட்சகரின் அழைப்பின் பேரில், வைத்தியர்கள் சிலருடன் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, சிறைச்சாலைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி, தற்போது யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்று வரும் கைதிகளுடன் கலந்துரையாடிய பணிப்பாளர், சிறைச்சாலையில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தியமைக்காகவும் தற்போது சிறைச்சாலையில் முன்னெடுப்படும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காகவும் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
அத்துடன், சிறைச்சாலையிலிருந்து அந்தக் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பின் மீண்டும் போதைப்பொருள்களைப் பயன்படுத்தாமல், அவர்களைக் கண்காணிக்கும் பொறிமுறைமையொன்றை உருவாக்கி, சமூகத்தில் அவர்களைப் பெறுமதியானவர்களாக மாற்றி, எதிர்காலத்தில் போதைப்பொருள் பாவனையற்ற நாட்டை உருவாக்குவதற்குத் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும், அவர் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணச் சிறைச்சாலையின் பிரதம சிறைச்சாலை அத்தியட்சகர், சிறைச்சாலை ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago