2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்

Janu   / 2024 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டமொன்று வெள்ளிக்கிழமை (30) மதியம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களை கருப்பு துணியால் கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தலைவர் துவாரகன், பல்கலைக்கழக ஒன்றியத்தின் செயலாளர் சிந்துஜன், கலைப்பீட மாணவர் ஒன்றியம் தலைவர் நெவில்குமார், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விதுசன், விரிவுரையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஊழியர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X