2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

யாழ்.மண்டைதீவிற்கு கள விஜயம்

Mayu   / 2024 மே 02 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் தில்லைநாதன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸூம் யாழ். மண்டைத்தீவு பகுதிக்கு புதன்கிழமை  (01) கள விஜயத்தில் ஈடுபட்டனர்.

கண்டல் தாவரங்களினால் இயற்கையாக அமைந்த நன்மைகள் பற்றியும், மண்டைதீவில் கண்டல் தாவரங்களின் பரம்பல் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

வெள்ள அனர்த்தத்தை தவிர்க்கவும், நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கத்தை அதிகரிக்கவும் இப்பிரதேசத்தில் வளரும் கண்டல் தாவரங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தவகையில் அவ்வாறான பங்களிப்பை அதிகரிக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இதன்போது ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .