2025 மே 02, வெள்ளிக்கிழமை

யாழ். மரக்கறி சந்தை தொகுதிக்குப் பூட்டு

Princiya Dixci   / 2021 மார்ச் 24 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மாநகர மரக்கறிச் சந்தைத் தொகுதி, மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரமே, இவ்வாறு மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர மரக்கறிச் சந்தைத் தொகுதியில், எழுமாறாக 60 பேரிடம் நேற்று (23) பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டதில்,  9 வியாபாரிகளுக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த தொற்றாளர்களில் 6 பேர், உள்ளூர் உற்பத்திப் பொருள் (பனம் பொருள்கள்) வியாபாரிகள் எனவும் மூன்று பேர் மரக்கறி வியாபாரிகள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, குறித்த சந்தைத் தொகுதியின் அத்தனை வியாபாரிகளும் சுயதனிமைப் படுத்தப்பட்டுள்ள அதேவேளை, இன்றைய தினம் சிலருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .