2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாநகர சபை வெளியேற இடைக்கால தடை

Freelancer   / 2023 ஏப்ரல் 05 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ்ப்பாணம், நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ், மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக, யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் இடைக்கால கட்டளை விதித்துள்ளது.

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் குறித்த வழக்கு நேற்று (04) விசாரணைக்காக எடுக்கப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவிட்டது.

வடக்கு மாகாண ஆளுநர், நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ். மாநகர சபையை வெளியேற பணித்ததுடன், அதை புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு எதிராக யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ. பார்த்தீபன் தாக்கல் செய்த வழக்கில், யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயரும் சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன் ஆஜராகியிருந்த போதே யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் இந்த இடைக்காலக் கட்டளையை பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு, ஏப்ரல் 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X