2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

யாழ். வாள்வெட்டு தொடர்பில் ஐவர் கைது

Freelancer   / 2022 மே 22 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் தொட்டிலடிச் சந்தியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர் மீது திருட்டு மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில், சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் நேற்று கைது செய்திருந்தனர்.

குறித்த சம்பவத்தில் அளவெட்டியைச் சேர்ந்த ஏ. ரதீஸ்வரன் (வயது-37) என்பவரே தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பித்தனர்.

சம்பவம் தொடர்பில் கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த இருவர், தெல்லிப்பழையைச் சேர்ந்த இருவர் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் திருட்டு மற்றும் கொள்ளையிடப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X