2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 ஜனவரி 26 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுந்தரராஜனின் 13ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி, ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாணத்தில், ​இன்று (26) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். ஊடக அமையம் மற்றும் வடக்கு, கிழக்கு கொழும்பு ஊடக அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் இன்று (26) காலை 10 மணியளவில்  நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தின் முதல் நிகழ்வாக, யாழ். பிரதான வீதியில் உள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் அதிரன், கொழும்பு ஊடக அமைப்பைச் சேர்ந்த பெடி ஹமகே ஆகியோரால் ஊடகவியலாளர்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து ஊடகவியலாளர் சுகிர்தராஜனுடன் பணியாற்றிய சக ஊடகவியலாளர் ஜெககேஸ்வரன், பொதுச்சுடரை ஏற்றி வைத்து ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X