Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ். மாவட்டச் செயலாளருக்கும் வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க அங்கத்தவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, யாழ். மாவட்டச் செயலகத்தில், இன்று நடைபெற்றது.
இதன்போது, மிக நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்று கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் இடமாற்ற பிரச்சினை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மாவட்ட நிர்வாக எல்லை கடந்து தேசிய ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய இந்தப் பிரச்சினைக்கு தன்னாலான ஒத்துழைப்புகளை வழங்குவதாக, மாவட்டச் செயலாளர் கூறினார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக ஓர் இடமாற்ற கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சில பரிந்துரைகளை தேசிய மட்டத்தில் மேற்கொள்வதாகவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
தொடர்ந்து யாழ். மாவட்ட ரீதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், அவர் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago