2025 மே 02, வெள்ளிக்கிழமை

ரூ.10 மில். பெறுமதியான ஹெரோய்னுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர், நேற்று (31) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுவரித் திணைகளத்தின் சாவகச்சேரி நிலையப் பொறுப்பதிகாரி அசோகரட்ணத்தின் அறிவுறுத்தலில், மதுவரிப் பரிசோதகர் வசீகரனின் தலைமையில், மல்லாகம் மற்றும் பருத்தித்துறை மதுவரி நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் இருந்து ஹெரோய்ன் போதைப்பொருள் 1 கிலோகிராம் கைப்பற்றப்பட்டதுடன், அதன் பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X