2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வீட்டுத்திட்டங்களை வழங்குவதற்கு நடவடிக்கை

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

விடுவிக்கப்பட்ட வலிவடக்கு உறணி பகுதியில் மக்களின் துரித மீள்குடியேற்றத்துக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்த வகையில் இந்தப் பிரதேசத்தில் 400 குடும்பங்கள் வாழ்வதற்கு உரித்துடையவர்களாக இருக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட உங்கள் காணிகளை இன்றில் இருந்து நீங்கள் பெற்றுக்கொண்டவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குட்ட ஊறணி கிராமத்தில் 28.8 ஏக்கர் காணி இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் மீள்குடியேற்றத்துக்காக, நேற்று வெள்ளிக்கிழமை (07) விடுவிக்கப்பட்டிருந்தது.

காணிகளை மாவட்ட செயலரிடம் உத்தியோகபூர்வமாக மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராட்சி வழங்கியிருந்தார்.

இந் நிகழ்வில் உரையாற்றிய மாவட்டச் செயலாளர்,

"இந்த பிரதேசத்தில் 1990 ஆண்டுகளுக்கு முன்னர் மிக நெருக்கமாக மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது விடுவிக்கப்பட்ட 28.8 ஏக்கர் காணியில் 400 குடும்பங்கள் வாழ்வதற்குரிய சொந்த நிலங்களை கொண்டுள்ளவர்களாக உள்ளனர்.

அவர்களில் கிட்டத்தட்ட 250க்கு மேற்பட்ட குடும்பங்கள், தங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆகவே விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுடைய காணிகளில் மீள்குடியேற்றுவதற்குரிய சகல வசதிகளையும் செய்வோம்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .