Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கோணாவில் காந்தி கிராமம் பகுதியில் உள்ள பிரதான வீதி முதல், குடியிருப்பு வீதிகள் வரையான பகுதி இதுவரை புனரமைக்கப்படாமையால், பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பருவமழை காலத்தில் பாதைகள் ஊடாக பயணம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த வீதிகளைப் புனரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள கோணாவில், காந்திக்கிராமம், ஆகிய பகுதிகளுக்கான பிரதான வீதி முதல் குடியிருப்பு வீதிகள் வரை எந்;த வீதிகளும் இதுவரை புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாகக் காணப்;படுவதுடன் சில வீதிகள் முற்றாக அழிவடைந்துள்ளன.
தற்போது குறித்த வீதிகளில் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இன்னும் ஓரிரு மாதங்களில் பருவமழை பெய்ய ஆரம்பித்தால், வீதிகள் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இப்பகுதி மக்கள் பயணிக்க முடியாத நிலை எற்படும் என்று இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன் குpறத்த முக்கியமான வீதிகளை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்;ளனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago