2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விபத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

காங்கேசன்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர், சிகிச்சை பலனின்றி நேற்று (07) உயிரிழந்துள்ளார்.

கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணம் முகவரியினைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கணபதிபிள்ளை பாலசுப்பிரமணியம் (வயது 76) என்பவரே உயிரிழந்தவராவார்.

கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் தலையில் காயமடைந்த குறித்த நபர், சிகிச்கைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இறப்பு விசாரணையை, யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி என்.பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .