2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Niroshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

5-செல்வநாயகம் கபிலன், கி.பகவான்

சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இன்று  செவ்வாய்க்கிழமை காலை 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சரசாலையைச் சேர்ந்த எஸ்.ஜனார்த்தனன் (வயது 20) ,நுணாவில் மேற்கைச் சேர்ந்த ஜேசுராஜா செல்வராசா (வயது 48) மற்றும் மீசாலையைச் சேர்ந்த தேவேஸ்வரன் ஜெனந்தன் (20) ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

ஒழுங்கை ஒன்றிலிருந்து ஏ-9 வீதிக்கு ஏறிய மோட்டார் சைக்கிளொன்று, ஏ-9 வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே குறித்த மூவரும் படுகாயமடைந்துள்ளனர்.இதில் ஒருவர் தூக்கி எறியப்பட்டு, மின்கம்பத்துடன் மோதுண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X