2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

விமானக்குண்டு வீச்சில் பலியாகிய மாணவர்களுக்கு நினைவுத்தூபி திறப்பு

Thipaan   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.கர்ணன்

கடந்த 1995ஆம் ஆண்டு புக்காரா விமானக் குண்டு தாக்குதலில் பலியாகிய 21 மாணவர்கள் நினைவாக வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் செவ்வாய்க்கிழமை (22) மாலை திறந்து வைக்கப்பட்டது.

விமானக் குண்டுத் தாக்குதலில் வித்தியாலயத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 21 மாணவர்களே பலியாகியிருந்தனர். இவர்களின் நினைவாக நினைவுத்தூபி அமைப்பதற்கான அடிக்கல் கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி நாட்டப்பட்டு நினைவுத்தூபி அமைக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, உறுப்பினர் எஸ்.சிவயோகன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .