2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வட இலங்கை சமாதான நீதவான்கள் சங்கம் அங்குரார்பணம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

வடமாகாணத்தில் வாழ்கின்ற சமாதான நீதவான்களின் சமூகப்பணியை பெற்றுக்கொடுப்பதற்கும், சமூக உரிமை நலன்களைப் பாதுகாப்பதற்கும்  உலக சமாதான தினத்தன்று, எதிர்வரும் 21 ஆம் திகதியன்று, வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில், யாழ் நாவலர் கலாச்சார மண்டபத்தில், வட இலங்கை சமாதான நீதவான்கள் சங்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சமாதான நீதவான்கள் சங்கத்தில் இணைந்து கொள்ள ஆர்வமுள்ள சமாதான நீதவான்கள், எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் தொடர்பு கொண்டு பதிவினை உறுதிப்படுத்தி கொள்ளுமாறு, அகில இலங்கை சமாதான நீதவான் சாமஸ்ரீ தேசமான்ய லியோன் பீதாம்பரம் ஜெயவிந்தன் மற்றும் அகில இலங்கை சமாதான நீதவானும் ஊடகவியலாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான, யோகதாசன் யூட்நிமலன் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.  இவர்களை தொடர்பு கொண்டு பதிவினை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

 

  • லியோன் பீதாம்பரம் ஜெயவிந்தன் 0776410869
  • யோகதாசன் யூட்நிமலன் 0777204554

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .