Freelancer / 2025 ஜூலை 13 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - எலுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று (12) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதி கொண்ட சுமார் 38 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
குறித்த கடல் பகுதியில் மிதக்கும் சந்தேகத்திற்கிடமான பையொன்று கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்தப் பையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 38 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடற்படையின் நடவடிக்கைகளின் மூலம் கரைக்கு கொண்டு வர முடியாததால், கடத்தல்காரர்கள் கேரள கஞ்சா கையிருப்பை எலுவை கடலில் கைவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன், பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா கையிருப்பின் பெறுமதி 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என நம்பப்படுகிறது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது. R
6 hours ago
7 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
20 Jan 2026