Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 ஜூலை 27 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாணத்துக்கான புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் டீ. எம் சுவாமிநாதனை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தான் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ சமீயூ முகம்மது பஸ்மி தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
“இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய ஆளுநர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.
“இதன் அடிப்படையில் வட மாகாண மக்களுக்கு நன்கு பரிச்சயமான முன்னாள் அமைச்சர் டீ.எம். சுவாமிநாதனை அம்மாகாணத்துக்கு ஆளுநராக நியமனம் செய்யுமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“1994ஆம் ஆண்டு தொடக்கம் மேல் மாகாண ஆளுநராகவும், பல ஆணைக்குழுக்களின் உறுப்பினராகவும், டி.எம் சுவாமிநாதன் சேவையாற்றியுள்ளார்.
“இந்தவகையில் டீ.எம். சுவாமிநாதனை வட மாகாண ஆளுநராக, நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .