2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வட மாகாணம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிதம்

Freelancer   / 2022 நவம்பர் 29 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன், எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். டிப்போ
ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு ஆதரவாக, வடக்கு மாகாணத்தில் உள்ள
ஏழு டிப்போக்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் (29) பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டன.

பின்னர், பொலிஸ் அதிகாரிகளின் வாக்குறுதிக்கமைய குறித்த போராட்டம் கைவிடப்படுவதாக
இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

பணிப் புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதுடன் இன்று(29) பிற்பகல் இரண்டு மணியில் இருந்து
போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 26ஆம் திகதி யாழ். - பலாலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவன்
காயமடைந்ததையடுத்து, அந்த பஸ் சாரதி கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு யாழ். போதனா
வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், இது குறித்து கைதான சந்தேகநபருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் பிணை
வழங்கியதையடுத்து யாழ். டிப்போ ஊழியர்கள் நேற்று முன்தினம் (28) பணிப்புறக்கணிப்பில்
ஈடுபட்டனர்.

அதற்கு ஆதரவாக வடக்கில் உள்ள ஏழு இ.போ.ச டிப்போக்களின் ஊழியர்கள் பணிப்
புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .