2025 ஜூலை 23, புதன்கிழமை

வடக்கில் கடற்றொழில் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

Kogilavani   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

'அத்துமீறியும், தடைசெய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்களைக் கொண்டும் சிலாபம் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த கற்பிட்டி கடற்றொழிலாளர்களை கைதுசெய்ய முடியுமென்றால், வடக்கில் அத்துமீறியும், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டும் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களை ஏன் கைதுசெய்து, அவர்களது செயற்பாடுகளைத் தடுக்க முடியாது' என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்;,

'சிலாபம் பகுதியில் கடந்த 3ஆம் திகதி அத்துமீறியும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தியும் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களை சிலாபம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஆனால், வடக்கில் குறிப்பாக, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தொடர்ந்தும் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டு அத்துமீறிய கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு நாம், பல தடவை வலியுறுத்தியும் அப்பகுதிகளில் மேற்படி செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. எனவே, சிலாபம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைளைப் போல்  இப்பகுதிகளிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென' என அவர் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .