2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் பிரதமர் சூழ்ச்சி?

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

வடக்கில், அபிவிருத்தி என்ற போர்வையில், பிரதமர் விகாரைகளை நிர்மாணித்து வருவதுடன், பிக்குகளைக் கொண்டு வந்து அமர்த்துவதாகவும் வட மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், குற்றஞ்சாட்டினார்.

தெரிவுசெய்யப்பட்ட பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கை மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மண்டபத்தில் இன்று (20) நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், அண்மையில் இரகசியமாக கிளிநொச்சிக்கு வந்திருந்த பிரதமர், அங்கு பிக்கு ஒருவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்டதுடன், அங்கு அவர் பிக்குவுடன் என்ன பேசிருப்பாரெனவும் கேள்வியெழுப்பினார்.

அத்துடன், ஒரு புறம் எமது பிரச்சினைக்கானத் தீர்வைப் பெறுவதற்கு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றதொரு நிலை காணப்பட்டாலும், மறுபுறத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுடைய காலில் நிற்க வேண்டும் என்பதற்கான போராட்டமொன்றும் முன்னெடுக்கப்படுவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .