2025 மே 09, வெள்ளிக்கிழமை

‘வடக்கில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்’

Gavitha   / 2020 நவம்பர் 04 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

வடமாகாணத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது என, வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்தார்.

யாழ்.நகரில், யாழ் பொலிஸாரால் இன்று (04) முன்னெடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பில், யாழ்.பொலிஸார் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் இதன் ஓர் அங்கமாக, யாழ்ப்பாணத்தில், மக்கள்  முகக்கவசம் அணிதல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டை மேற்கொண்டதாக அவர் கூறினார்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரைக்கும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் சுகாதார திணைக்களத்தினரின் சுகாதார நடைமுறைகளைக் கட்டாயமாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X