2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வடக்கில் மீண்டும் தொற்றாளர்கள்

Editorial   / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தில்லைநாதன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருமாக வடக்கில் நேற்று 17 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். சோதனையிலேயே இந்த விடயம் வெளியானது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 83 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 6 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவருக்குமாக யாழ்ப்பாணத்தில் 8 பேருக்கும், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 48 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். சோதனையில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .