Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கான நடமாடும் சேவையை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண பிரதிப் பணிப்பாளர்தி ருமதி கவிதா ஜூவகன் தெரிவித்தார்.
வட பகுதியில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெற்று கொடுப்பதற்காக இந்த நடமாடும் சேவையை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதாக எதிர்வரும் 9ஆம் திகதியன்று, நகர விருத்தி அதிகார சபையின் வட மாகாண காரியாலயத்தின் முதலாம் மாடியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக, வவுனியா மாவட்டம் மற்றும் முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக வவுனியா கலாசாரம் மண்டபத்தில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு நடமாடும் சேவைகளையும் காலை 8:30 மணி தொடக்கம் பிற்பகல் 2:30 மணி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த நடமாடும் சேவையில் கட்டட கட்டுமானம், காணி தொடர்பான பிரச்சினைகள், அங்கிகாரமற்ற கட்டடங்கள் மற்றும் வேறு கட்டட அனுமதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
01 May 2025
01 May 2025