Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 24 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய ஒருமைப்பாடுமற்றும் நல்லிணக்கஅமைச்சினால் முதற்கட்டமாக நல்லிணக்க முன்னெடுப்பின் கீழ், அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட வீதிஅபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் கீழ் 1847.4 கிலோமீற்றர் வீதிகள் புனரமைக்கப்படுவதற்கான நிதியீட்டலுடன் கூடிய கேள்வி கோரல்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக,தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கஅமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதிதெரிவித்தார்.
இதன் கீழ் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் வருகின்ற A மற்றும் B வகைவீதிகளும் (173.5 கிலோமீற்றர்கள்) ,மாகாணமட்டத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் வருகின்ற C மற்றும் D வகைவீதிகளும் (394.45 கிலோமீற்றர்கள்),உள்ளூராட்சிசபைகளின் கீழ் வருகின்ற வீதிகளுமாக (1279.45கிலோமீற்றர்கள்) மொத்தம் 1847.4 கிலோ மீற்றர் வீதிகள் புனரமைக்கப்படும்.
இதன் கீழ் முதற்கட்டமாக யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதியும் (27.7கிலோமீற்றர்கள்), யாழ்ப்பாணம்-புன்னாலை-பருத்தித்துறை வீதியும் (36.15கிலோமீற்றர்கள்),வழுக்கையாறு -புங்குடுதீவு-குறிகட்டு வான்வீதியும் (24.5 கிலோமீற்றர்கள்) உள்ளடக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் முறிகண்டி-கனகபுரம் டுப்பிளிகேசன் வீதியும் முல்லைத்தீவில் வன்னிவிளான்குளம்-பனங்காமம் வீதி, இரட்டை வாய்க்கால் மத்தளன் சாலை வீதி,வத்தாப்பளைபிரதான வீதிமற்றும் மன்னார் மாவட்டத்தில் பிரமனாளங்குளம் பெருப்புகடந்தான் வீதி,மகிளங்குளம் பள்ளமடுவீதி உட்பட பல வீதிகளும் திருகோணமலைமாவட்டத்தில் தோப்பூர் மத்தியவீதி,சீதனாவெளிபாட்டாளிபுரம் வீதி உட்பட பலவீதிகளும் அம்பாறை மாவட்டத்தில் பானமகும்புக்கள் வீதி,சியம்பலாண்டுவ தமனவீதி உட்பட பலவீதிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் தொப்பிகல வடமுனைவீதி,மரைன் டிரைவ் உட்பட பலவீதிகளும் புனரமைக்கப்படவுள்ளன.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago