2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

வடக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரம் மாற்றப்படுமா?

Editorial   / 2017 டிசெம்பர் 25 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்திலுள்ள அரச பாடசாலைகள் அனைத்தும் அடுத்த வருடத்திலிருந்து காலை 8 மணிக்கு ஆரம்பிப்பது தொடர்பில் வடமாகாண சபை அவதானம் செலுத்தியுள்ளது.

வடமாகாணத்தின் உறுப்பினர்கள் பலர் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் கந்தையாவை சந்தித்து இதுதொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வடமாகாணத்தின் பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பல பிரச்சனைகளை எதிர்நோக்குவதாகவும் உறுப்பினர் மாகாண கல்வி அமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளனர்.

அத்துடன், இதுதொடர்பில் ஆளுநரின் அனுமதியுடன் தேவையான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு  வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் கல்வி அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பில் பாடசாலை ஆரம்பிக்கும் முன்பதாக தீர்வினை வழங்குமாறு குறித்த யோசனையை முன்வைத்துள்ள மாகாண சபை உறுப்பினர்கள் மாகாண கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X