Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஒக்டோபர் 21 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவீனமயமாக்கப்பட்ட வடக்கு புகையிரதத்தின் மஹவ முதல் அநுராதபுரம் வரையான பகுதி நாளை (22ஆம் திகதி) திறக்கப்படவுள்ள போதிலும், இந்த இடைப்பட்ட நிலையங்களில் உள்ள ரயில்வே அதிகாரிகள் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
3,000 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட இந்த புகையிரத மார்க்கத்தை, குறைபாடுகளுடன் ரயில்வே துறை கையகப்படுத்தியதே இதற்கு காரணம் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன நேற்று தெரிவித்தார்.
இந்த பாதை நவீனமயப்படுத்தப்படுவதற்கு மேலதிகமாக இருந்த சமிக்ஞை அமைப்பும் அகற்றப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பற்ற நான்கு புகையிரத கடவைகளில் கேட்கள் பொருத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தலாவ, தம்புத்தேகம, கல்கமுவ மற்றும் அநுராதபுரம் புகையிரத நிலையங்களுக்கு அருகில் உள்ள கடவைகள் கையால் இயக்கப்படும் வாயில்களாக மாற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த போதிலும் இதுவரை பாதுகாப்பு கதவுகள் பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
உரிய தரம் இன்றி மேற்கொள்ளப்படும் நவீனமயமாக்கல் பணிகளால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பரிகாரமாக மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதியில் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத சாரதிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
இக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதியில் உள்ள புகையிரத நிலையங்களை தாம் பொறுப்பேற்கப்போவதில்லை எனவும், அதற்கமைய பயணச்சீட்டு வழங்கப்படவோ, பொதிகள் மற்றும் பொருட்கள் பெறப்படவோ அல்லது புகையிரத திணைக்களத்திற்கு வருமானம் அறவிடப்படவோ மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். R
34 minute ago
39 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
55 minute ago