2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

வடக்கு புதிதாக 101 மருத்துவர்கள் நியமனம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடக்கு மாகாண  வைத்தியசாலைகளுக்கு 101 மருத்துவர்கள் சுகாதார அமைச்சால் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு சுகாதார அமைச்சால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் 27 மருத்துவர்கள், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கும் 20 மருத்துவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் ஏனையவர்கள் ஏனைய மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தவிர்ந்த அனைத்து மாவட்ட, ஆதார மற்றும் பிரதேச வைத்தியசாலைகளுக்கே, இவ்வாறு 101 மருத்துவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையை ஓரளவு நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நியமனம் அமைந்துள்ளது எனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .