2025 மே 21, புதன்கிழமை

’வடக்கு மாகாண சபையில் அமைச்சர்களின் ஆசனங்களை ஒழுங்குபடுத்த வேண்டாம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜித்தா

 

வடக்கு மாகாண சபையில் யார் அமைச்சர்கள், எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் வரை, அமைச்சர்களுக்குரிய ஆசனங்களை ஒழுங்குபடுத்த வேண்டாமென, சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா வேண்டுகோள் விடுத்தார்.

வடமாகாண சபையின் அமர்வு இன்று (09) நடைபெற்ற போது, சபையின் ஆசன ஒதுக்கீடு மற்றும் சபைக்கு அமைச்சர்கள் வகைகூறல் தொடர்பான அவசரக் கோரிக்கை மனுவொன்றை, தவராசா முன்மொழிந்தார்.

அரசமைப்பின் பிரகாரம், மாகாண சபை ஒன்றுக்கு, முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்களுக்கு மேல் இருக்க முடியாதென்றும் ஆனால் இன்று, வடக்கு மாகாண சபையில் ஆறு அமைச்சர்கள் செயற்படுவதாகவும் இவ்விடயம்  சீர் செய்யப்படாத வரை, அமைச்சரவையைக் கூட்ட வேண்டாமென்று, பிரதம செயலாளருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளாரென்றும், எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துரைத்தார்.

ஆதலால், முதலில் இந்த மாகாண சபையில் யார் அமைச்சர்கள் என்று முதலமைச்சரால் ஒழுங்கு செய்யப்படும் வரை, சபையில் அமைச்சர்களுக்குரிய ஆசனங்கள் ஒழுங்கு செய்யப்படக் கூடாதென, அவைத் தலைவரிடம் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், இதற்கு நிரந்தரமான தீர்வொன்று உடனடியாகக் காணப்படல் வேண்டுமென்றும் இன்றேல், இச்சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தல் அர்த்தமில்லாததாகி விடுமென்றும், எதிர்கட்சி தலைவர் எடுத்துரைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .