2025 ஜூலை 31, வியாழக்கிழமை

வடதாரகையின் நேரம் மாற்றம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

குறிக்காட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் வடதாரகை பயணிகள் படகு சேவையின் நேர அட்டவணை கடந்த 5ஆம் திகதியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

வழமையாக காலை 8.30 மணிக்கு குறிகட்டுவானிலிருந்து புறப்படும் படகு சேவையானது, தற்போது காலை 8.00 மணியாக மாற்றப்பட்டுள்ளது. இதேவேளை நெடுந்தீவிலிருந்து மாலை 2.30 மணிக்கு புறப்படும் படகு 4.30 மணிக்கு குறிகட்டுவானுக்குச் சென்றடையும்.

அரச மற்றும் தனியார் நிறுவன அலுவலர்களின் நலன் கருதியே வடதாரகை படகு சேவையின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் ஏனைய படகுகளின் சேவைகள் வழமைபோல் இயங்கும் எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .