2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வடமாகாண ஆளுநர் கடமைகளை மீளப் பொறுப்பேற்றார்

Editorial   / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண ஆளுநராக மீளவும் நியமனம் பெற்றுள்ள றெஜினோல் கூரே இன்று (17) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

மாகாண ஆளுநர் மாற்றத்தின் போது, மீளவும் வடக்கு ஆளுநராக றெஜினோல்ட் கூரே நியமிக்கப்பட வேண்டுமென பல தரப்பினர்களும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைய வடக்கு ஆளுநராக றெஜினோல்ட் கூரேயை ஐனாதிபதி மீளவும் நியமித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (17) யாழுக்கு வந்த கூரேக்கு பலாலியில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக அமைந்துள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தில், மாலைகள் அணிவித்தும் பொன்னாடைகள் போர்த்தியும் வரவேற்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மீளவும் வடக்கு மாகாண ஆளுநருக்கான தன்னுடைய கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

இதன் போது, “வடக்கிலுள்ள பலரதும் வேட்டுகோளுக்கமையவே தான் மீளவும் இங்கு வந்துள்ளதாகவும், தான் இங்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறையவே இருப்பதாகவும் அவற்றைச் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் தான் முன்னெடுக்க உள்ளதாக” ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X