Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
மல்லாகம் பகுதியில் இரு ஆலயங்களுக்கு இடையில் இடம்பெறவிருந்த வருடாந்த திருவிழா தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேலதிக மாவட்டச் செயலர் சுகுணரதி தெய்வேந்திரம்; எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மல்லாகம் பகுதியில் பதட்டம் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து இரு தரப்பினர்களுக்கு இடையில் கலவரம் வரலாம் என்ற காரணத்தினால் பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மல்லாகம் காளி அம்மன் கோயிலில் இடம்பெற்ற திருவிழா தொடர்பான பிரச்சினையினை தீர்த்து வைப்பதற்காக மேலதிக மாவட்டச் செயலர் கோயிலுக்கு சென்று ஆலய தர்ம தர்மகத்தா சபையினருடன் கலந்தாலோசித்திருந்தார்.
இதன் போது, குறித்த பகுதியில் உள்ள இரு கோயில்களான மேற்படி காளி அம்மன் ஆலயத்துக்கும் மல்லாகம் பழம்பதி முருகன் ஆலயத்துக்கு ஒரே திகதியில் தேர் மற்றும் தீர்த்த திருவிழா இடம்பெறுவதனைத் தடுக்குமாறு பொதுமக்கள் சில கோரிக்கைக்களை முன்வைத்தனர்.
பாலஸ்தானம் செய்யப்பட்டு அலங்கார திருவிழாவில் இருந்து புதிதாக மகோற்சவம் செய்வதற்கு காளிஅம்மன் ஆலயத்துக்கு ஒரு தினம் எடுக்கப்பட்டிருந்தது.
இதனை மாற்றுவதற்கு ஒரு சிலர் முயற்சித்த போது பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தீர்த்து வைப்பதற்கு மேலதிக மாவட்டச் செயலர் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.
இதனையடுத்து அப் பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டதுடன், தெல்லிப்பழை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago