Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 19 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக, நெற்ச்செய்கையில் எதிர்பார்த்த இலக்கை எட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்டப் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில், தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
மாவட்டத்திலுள்ள 10 வரையான பெரிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் 3,087 ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் 995 ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறுபோக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது அங்கு அறுவடைகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தற்போது நிலவி வரும் வரட்சியைக் கருத்தில் கொண்டு, மாகாண விவசாயத் திணைக்களத்தால், குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி, விவசாயத்தை மேற்கொள்ளக்கூடிய சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தூவல் நீர்ப்பாசனம் ஆகிய தொழில்நுட்ப முறைகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனூடாக மேட்டு நிலப்பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அந்த வகையில், தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி, 2,105 ஏக்கர் நிலப்பரப்பில், மேட்டு நிலப்பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டபோதும், அதில் 300 ஏக்கர் வரையிலான செய்கை வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்தப் போகத்தில் அதிகளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், 828 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கறிச் செய்கையும் சுமார் 3,348 ஏக்கர் நிலப்பரப்பில் பழப் பயிர்செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த ஆண்டில் மாத்திரம், ஐம்பது ஏக்கரில், புதிய நடுகையும் மேற்கொள்ளப்பட்டுள்ளாக, அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago