2025 மே 21, புதன்கிழமை

வரட்சியால் வடக்கில் 3 இலட்சம் பேர் பாதிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

நாட்டில் நிலவும் வரட்சி வானிலை காரணமாக, வடக்கு மாகாணத்தில், ஒரு இலட்சத்து 741 குடும்பங்களைச் சேர்ந்த, 3 இலட்சத்து 47 ஆயிரத்து 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் இன்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வரட்சியுடனான வானிலை காரணமாக, ஒரு இலட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் இதில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களே, அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வட மாகாணத்தில் ஒரு இலட்சத்து 741 குடும்பங்களைச் சேர்ந்த, 3 இலட்சத்து 47 ஆயிரத்து 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் அதில் கிளிநொச்சி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் 33 ஆயிரத்து 165 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 735 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டத்தில், கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பச்சிளம்பள்ளி ஆகிய பகுதிகளே, அதிகளவில் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனவெனவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் 30 ஆயிரத்து 404 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவித்துள்ளதுடன், யாழ்ப்பாணம், காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை, சாவகச்சேரி, உடுவில், சண்டிலிப்பாய், கோப்பாய், நெடுந்தீவு உள்ளிட்ட பல பகுதிகள் வரட்சியால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மன்னார் மாவட்டமும் வரட்சியால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி, அந்த மாவட்டத்தில் 29 ஆயிரத்து 421 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 737 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X