2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

வரணியில் அதிரடிப்படையினர் சூடு: இருவர் காயம்

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினமிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கொட்டனால் தாக்கப்பட்டு இன்னொருவருமாக இருவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் கையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்ட விரோத மதுபானம் விற்பனை செய்வதாக தெரிவித்தே தங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட விசேட அதிரடிப படையினரை கைது செய்த கொடிகாமம் பொலிஸார், நேற்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் ச.இளங்கோவன் பிணையில் விடுவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .