Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சொர்ணகுமார் சொரூபன் / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள 683 ஏக்கர் காணிகள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதிகளில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் காணப்படுகின்றன.
காணி உரிமையாளர்களால் கிராம சேவகர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் விடுமுறையில் உள்ளமையால் வெடிபொருட்களை அப்புறப்படுத்த முடியாது உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28 வருடங்காளாக வலி. வடக்கு பகுதியில் பெருமளவான மக்களின் காணிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு உயர்பாதுகாப்பு வலயமாக இருந்தது.
தற்போது, இந்த நிலப்பகுதிகள் பகுதி பகுதியாக மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுகின்றது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (13) கட்டுவன் ஒரு பகுதி, தென்மயிலை, மயிலிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள காணிகள் சில மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் மக்கள் விரைந்து தமது காணிகளை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது தென்மயிலை பகுதியில் உள்ள காணியொன்றில் காணப்படுகிற தண்ணீர்தொட்டியில் பெருமளவான வெடிபொருட்கள் வெடிக்காத நிலையில் காணப்படுகிறது.
மேலும், இரும்புவியாபாரிகள் இப்பகுதிகளிலிருந்து வெடிபொருட்களையும் எடுத்துச் செல்கின்றனர்.
கடந்த மூன்று தினங்களுக்குள் 6 வெடிபொருட்கள் இவர்களால் எடுத்துசெல்லப்பட்டுள்ளது. அனைத்தும் வெடிக்காத நிலையில் இருந்தவை.
கடந்த 28 வருடங்களாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகள் மக்களின் பாவனைக்கு விடுவிக்கபட்டுள்ள நிலையில், இவ்வாறு வெடிபொருட்கள் உள்ளமை தொடர்பில் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளதுடன், தொடர்ந்தும் தமது காணிகளை துப்பரவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்;.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago